கனடாவில் கொரொனோ விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு!

கோவிட் சட்டங்களை மீறிய கனேடியர்களுக்கு இந்த ஆண்டு சுமார் 15 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்19 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

கனேடிய பொதுச் சுகாதார திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கோவிட் குறித்த பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளை கனடா இந்த ஆண்டு தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் தடுப்பூசி ஏற்றுகை, அரைவ் கன் செயலி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினர் கடுமையான நடைமுறைகளை அமுல்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் சமஷ்டி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 3614 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

825 டொலர்கள் முதல் 5000 டொலர்கள் வரையில் இந்த அபராத தொகை மாறுபடுவதாகவும் இதுவரையில் மொத்தமாக 14.8 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.