அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்தில் இந்திய மருத்துவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ராமமங்கலத்தை சேர்ந்தவர் மினி வெட்டிக்கல் (வயது 52). மினி வெட்டிக்கல் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வீட்டுக்கு காரில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மினி வெட்டிக்கல் வந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் மினி வெட்டிக்கல் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மினி வெட்டிக்கல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. விபத்தில் மினி வெட்டிக்கல்லுக்கு திருமணமாகி கணவரும் குழந்தைகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.