யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதித் தள்ளிய யாழ்தேவி

யாழ்.தேவி புகைரதம் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பகல் கொழும்பிலிருந்து – யாழ்.காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியுள்ளது.

நேற்று தனது வீட்டுக்கு முன்பாக ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.