விஜயின் 67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

நடிகர் விஜய்
விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். காரணம் இந்த வருடம் வெளியான அவரது பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை, மோசமான விமர்சனங்களை பெற்றது.

வசூலிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, எனவே ரசிகர்கள் கடும் வருத்தம் அடைந்தனர். இதனால் விஜய்யின் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.

படமும் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது, அந்த நாளுக்காக தான் தளபதி ரசிகர்கள் வெயிட்டிங்.

தளபதி 67
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.

இப்படத்தின் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக்கை படக்குழு அணுகியுள்ளனர்.

ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளார், காரணம் அவரது சில மாதங்களுக்கு முன்பு முட்டி வலி பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார் என்கின்றனர்.