இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸ் மகன்

மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘சல்லியர்கள்’. இப்படத்தை நடிகர் கருணாஸ் தனது ஐசிடபுள்யூ தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி உள்ளிட்ட பலர் முக்

இப்படத்தின் மூலம் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஈஸ்வர் என்ற அவருடைய நண்பருடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய கென் கருணாஸ், “இந்தப் படத்திற்கு என் நண்பன் ஈஸ்வர்தான் மெயின் இசையமைப்பாளர். நான் அவனுக்குப் பக்க பலமாக பணியாற்றியுள்ளேன்” என்றார்.