மீண்டும் சீரியலுக்கு வரும் திருமுருகன்

திருமுருகன் இயக்குனர்
தமிழில் சின்னத்திரையில் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கிவரும் பிரபலம் திருமுருகன். மெட்டி ஒலி என்ற தொடரை இயக்கி பெரிய அளவில் வரவேற்பு பெற்றார், அதன்மூலமே மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

அந்த தொடருக்கு பிறகு தொடர்ந்து நாதஸ்வரம், தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு என தொடர்ந்து சீரியல்கள் இயக்கி நடித்தும் வந்தார். அதன்பிறகு திருமுருகன் என்ன தொடர் எப்போது இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

புதிய தகவல்
தற்போது அவரது புதிய தொடர் குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அதாவது அவர் புதிய தொடர் இயக்க தயாராகிவிட்டாராம், முதலில் அவர் இந்த முறை கலைஞர் தொலைக்காட்சியில் இயக்குகிறார் என்றனர்.

ஆனால் தற்போது சன் தொலைக்காட்சியில் தான் அவரது புதிய தொடர் வர இருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, எந்த தொலைக்காட்சி என்பது ரசிகர்களுக்கு பெரிய குழப்பமாக உள்ளது.