பல மடங்கு வசூலை சம்பாதித்த லவ் டுடே

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த 4ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே.

விறுவிறுப்பான கதைக்களம், சலிக்காத திரைக்கதை, தேவைக்கு அதிகமான நகைச்சுவை என மிரட்டியிருந்தார் பிரதீப். இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார்.

சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சமீபத்தில் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்த இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ. 2.25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

பல மடங்கு லாபம்
இந்நிலையில், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 15 மடங்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விரைவில் கண்டிப்பாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலை லவ் டுடே எட்டும் என்றும் கூறப்படுகிறது.