இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ்

இலங்கையில் உள்ள பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக தாங்கள் உண்பதைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவசரகால நடவடிக்கையாக பிரான்சிடம் இருந்து 500,000 யூரோ (சுமார் 190 மில்லியன் ரூபாய்) நன்கொடையை பெற்றுக்கொண்ட நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 9,000 குடும்பங்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றன.

உணவுப்பொதி வழங்கள்
இந்த நிலையில் பிரான்ஸின் உதவியின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு உணவுப் பொதியை பெறவுள்ளது.

15,000 ரூபா பெறுமதியான இந்த உணவுப்பொதியில் முட்டை, அரிசி, புதிய பால், சிவப்பு பருப்பு மற்றும் பிற புரதம் நிறைந்த பருப்பு வகைகள் என்பன அடங்கியுள்ளன.

பொருளாதார நெருக்கடி
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு உணவுப்பொதிகள் குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த உதவியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வின்போது கருத்துரைத்த, உலக உணவுத்திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக், இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக உண்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.