மின்சாரசபை ஊழியர்களை தாக்கிய முன்னாள் பிரதியமைச்சர்

கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை முன்னாள் பிரதியமைச்சர் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டிற்கான மின்கட்டணம் பெருந்தொகை நிலுவையில் இருப்பது தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்திய போதும், கட்டணத்தை உரியவர்கள் செலுத்தவில்லை.

இதனையடுத்து ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்க சென்றதாகவும், முன்னாள் அமைச்சர் தம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதாகவும் மேற்படி ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் .