ஜனனியின் தமிழை கொச்சைப்படுத்திய விக்ரமன்

பிக்பாஸ் வீட்டில் ஜனனியின் இலங்கை தமிழில் பிரச்சினை என வாக்கு வாதங்கள் நடைப்பெற்று வருகிறது.

ஆறாவது வார டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மிக பிரமாண்டமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் ஜனனி உட்பட் மொத்தமாக 15 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்போது ஆறாவது வாரம் செல்கிறது. இந்த வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களும் இதில் முன்புறமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த டாஸ்க் இரண்டாவது தடவையாக அசீம், விக்ரமன் வாதம் செல்கிறது. இதில் விக்ரமன் ஜனனி பேசும் தமிழை கொச்சைப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விக்ரமனுக்கு எதிராக குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த வழக்கிற்கு அசீம் வழக்கறிஞராகவும், மணி நீதிபதியாகவும் ஜனனி மற்றும் விக்ரமன் வாத பிரதிவாதியாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாதங்கள் அனைத்தும் ஜனனிக்கு சாதகமாக இருக்கிறது, இந்த வழக்கில் அசீம் வெற்றியடைய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.