வவுனியாவை சேர்ந்த பத்து பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்

இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்ல முனைகின்றனர்.

தமிழகத்தில் தஞ்சம்

அந்தவகையில் இன்று காலையும் 10 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியைச் சென்றடைந்தள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்களும், 2 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி 10 பேரில் 9 பேர் வவுனியா மாவட்டத்தையும், ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.