கனடாவில் குறைவடையும் வீட்டு விலைகள்

கனடாவில் வீட்டு விலைகள் சற்றே குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 816720 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த தொகை 170000 டொலர்களினால் குறைவடைந்து வீடு ஒன்றின் சராசரி விலை 644643 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு வீடு விலை குறைவடைந்த போதிலும் இணையத்தில் வீடுகளை தேடுவோர் அதனை விடவும் குறைந்த விலைக்கு வீடுகளை தேடி வருகின்றனர்.

Canadian Real Estate Association என இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையில் வீடு கொள்வனவு செய்வதற்காக Point2 Homes என்னும் இணைய வழி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஊடாக தேடுதல் மேற்கொண்ட ஐந்து மில்லியன் பேரில் 75 வீதமானவர்குள் 600,000 டொலர்களுக்குள் வீடு கொள்வனவு செய்யும் நோக்கில் தேடுதல் செய்துள்ளனர்.

பணவீக்கம், பெருந்தொற்று உள்ளிட்ட பல காரணிகளினால் வீடு கொள்வனவு செய்வோர் குறைந்த தொகையில் வீடுகளை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.