போதையில் காதலனை சுட்டுவிட்டு தப்பி ஓடிய மாடல் அழகி

போதையில் பிரேசில் மாடல் அழகி ஒருவர் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து நிர்வாணமாக வெளியேறினார்.

பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ்(Marcella Ellen Paiva Martins) தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன்(Jordan Lombardi) பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார்.

லோம்பார்டியாவும்(Jordan Lombardi) மார்செல்லாவும்(Marcella Ellen Paiva Martins) ஜனவரி 2023 இல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். அழகி மார்செல்லா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது.

அப்போது லோம்பார்டியிடம் இருந்து கைத்துப்பாக்கியைப் பறித்து அவரை சுட்டு உள்ளார். படுகாயம் அடைந்த காதலர் லோம்பார்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் அவர் நிர்வாணமாக லோம்பார்டியின்(Jordan Lombardi) ஆடி கியூ7 காரில் தப்பிக்க முயன்று உள்ளார். அப்போது ஓட்டலின் வாயிலில் டிரைவரை தாக்கி உள்ளார். பின்னர் பள்ளி பேருந்தின் ஓட்டுநரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளார்.