இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு பகுதியில் நில நடுக்கம்

இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த விடயத்தை கூறியுள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.