ரெட்மி நோட் 12 சீரிஸ் சர்வதேச வெளியீடு – இணையத்தில் லீக்

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் வென்னிலா ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சீன வெளியீட்டை தொடர்ந்து ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி குளோபல் வேரியண்ட் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.

இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. தற்போது டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ரெட்மி நோட் 12 சீரிஸ் சர்வதேச வெளியீட்டு தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் சீரியல் ப்ரோடஷன் ஆசியா மற்றும் ஐரோப்பியா பகுதிகளில் துவங்கி நடைபெற்று வருவதாக முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். அதன்படி புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் இந்திய சந்தையில் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிசில் 6.67 இன்ச் பன்ச் ஹோல் ரக 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 2.2 மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

இத்துடன் ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் முறையே 67 வாட் மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் 50MP கேமரா, OIS, ப்ரோ பிளஸ் மாடலில் 200MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் சிம், 5ஜி, வைபை 6, GNSS, NFC மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.