இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர் தானாம்!

தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன் வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

குறிப்பாக 35 நாட்களை கடந்து விட்ட இந்த சீசனானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியானது எப்போதும் போலவே இப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறும் சண்டைகள் தான்.

21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்த நிகழ்வில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அந்தவகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

இந்த வாரம் ராம் அல்லது மகேஸ்வரி தான் வெளியேறுவார்கள் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகேஸ்வரி குறைந்து வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.