டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினால் அதிகரித்து 430 ரூபாவாக உள்ளது, மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயினால் அதிகரித்து 365 ரூபாவாக விற்பனையாகுகின்றது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என்பதோடு லங்கா ஐ.ஓ.சியும் டீசல் விலையை 15 ரூபாயினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.