யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கிடைத்த சிறப்பு கவுரவம்..

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கமல்ஹாசன், பாவனா மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.