சீனாவில் கொரொனோ அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் நீடிப்பு!

நீடிக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் உலகில் முதல்முறையாக கொரோனா தொற்று வூஹான் நகரில் பதிவானதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்தி விட்டது.

இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்தசில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து நேற்று முன்தினம் 3,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குவாங்சூ, ஜெங்சூ, மங்கோலியா பகுதி, ஜின்ஜியாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசின் கடும்போக்கு நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமுடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.