தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6யில் அடுத்தடுத்து பல விறுவிறுப்பு நிறைந்த சம்பவங்களால் வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளிலும் புது புது பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் நிகழ்ச்சி முழுக்க விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு சூழலில், தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் காரணமாக பல போட்டியாளர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதமும் சண்டையும் அரங்கேறி வருகிறது.
இதனால், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக் பாஸ் வீடும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், ராம், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே பொம்மை டாஸ்க் மத்தியில் நடந்தது தொடர்பான விஷயம், இன்னும் பரபரப்பை தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் அணிகளாக பிரிந்து பொம்மை டாஸ்க்கில் விளையாடி வருகின்றனர்.
அப்போது, தனது கையில் இருக்கும் பொம்மையை உள்ளே கொண்டு வைக்க ராம் முயற்சித்துள்ளார். இருப்பினும், வாசல் அருகே ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதிக உயரமுள்ள ராம், அவர்களை தள்ளி விட்டு உள்ளே செல்வேன் என்றும், அதனால் உள்ளே விடுங்கள் என எச்சரிக்கவும் செய்தார்.
ராம் உயரமாக இருக்கிறார் என்பதையும் தாண்டி, கேம் மற்றும் டாஸ்க் என்பதால் எப்படி இருந்தாலும் உள்ளே விட மாட்டோம் என்பதில் ஜனனி மற்றும் தனலட்சுமி தீவிரமாக இருந்தனர்.
அவர்களை விலக்கி விட்டு உள்ளே செல்ல ராம் முயன்றாலும் தொடர்ந்து தங்களின் பலத்தை ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் நிரூபித்துக் கொண்டனர்.