14 நாட்கள் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்த ஜி.பி.முத்துவிற்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜி.பி.முத்து
பிக்பாஸ் 6வது சீசனில் பல துறைகளில் இருந்த கலைஞர்கள் வந்துள்ளார்கள். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என எல்லாம் கலந்து கலவையாக இந்த பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் உள்ளார்.

அப்படி மக்கள் கொண்டாட் பிக்பாஸ் 6வது சீசனில் முதல் ஆளாக வீட்டிற்குள் சென்றவர் ஜி.பி.முத்து. மக்கள் இவர் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்தார்கள், கண்டிப்பாக இவர் அனைவருடனும் போட்டிபோட்டு வெல்வார் என நினைத்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை, ஜி.பி. முத்து சில காரணங்களாக அவராகவே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

14 நாள் சம்பளம்
அக்டோபர் 9ம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து அந்த பிரம்மாண்ட வீட்டில் 14 நாட்கள் இருந்துள்ளார். அதற்காக அவர் மொத்தமாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.