பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.

மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இரண்டு வாரங்களை கடந்துள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வத்தை கூட்டும் வகையில் சண்டை, சச்சரவு என பல நாட்கள் ஒன்றாக இருந்தது போல பார்வையாளர்களுக்கு அனுபவத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆம், இன்று நடந்த கமல் எபிசோட்டில் போட்டியாளர் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.