டி 20 உலக கோப்பை – சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய இலங்கை, மற்றும் நெதர்லாந்து அணிகள்

8-வது டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் முதல் சுற்று போட்டியில் குரூப் ‘ஏ’ வில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நமிபியா அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றதால் நமிபியா அணி சூப்பர் 12 சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. முதல் சுற்று முடிவில் குரூப் ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும். குரூப் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இந்திய அணியின் குரூப்பில் இடம்பெறும். அந்த வகையில் குரூப் ‘ஏ’ பிரிவு ஆட்டங்கள் இன்று முடிந்துள்ளன.

இதில் 2-வது இடம் பிடித்த நெதர்லாந்து அணி, இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் பாகிஸ்தான், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளோடு இணைந்துள்ளது. அதே போல் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள இலங்கை அணிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், குரூப் 2 ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றுள்ள குழுவில் இடம் கிடைத்துள்ளது.