தினமும் முட்டையை உணவில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான். வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும், தேவையான கனிம சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை திறன் மேம்படுதல் போன்றவற்றுக்கு முட்டை உலகளவில் சிறந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலக முட்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

கடந்த ஆண்டு உலக முட்டை தினத்தையொட்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சமூக வலைதளங்களில் முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் பல போட்டிகளை வைத்து முட்டை உண்பதில் அவசியத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டும் முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம். வளரும் தலைமுறையினரை வலுவாக்குவோம்.