உடல் எடையை குறைக்க வியர்வை வரும் வரை பயிற்சிகள் செய்ய வேண்டும்…

உங்களுக்கு பிடித்திருக்கு மிகவும் எளிதாக இருக்கு என்பதற்காக, ஒரே பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு இருத்தல் கூடாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சவாலாக இருக்கும் வகையிலான பயிற்சிகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும்.

மாதத்திற்கு ஒருமுறையாவது,பயிற்சிகளை மாற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும். இதில் இதய பாதுகாப்பு பயிற்சிகளும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வாரம் இரண்டு அல்லது 3 முறை ஜிம்முக்கு செல்வது, இதய பராமரிப்புக்கு வழிவகுக்கும் என்றபோதிலும், உடல் எடையை குறைக்க திட்டம் இட்டுள்ளவர்கள், தினமும் ஜிம்முக்கு சென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும். தினமும் 3 மைல்கள் நடக்க வேண்டும், அல்லது ஓட வேண்டும் அல்லது சைக்கிளிங் செய்ய வேண்டும்.

அல்லது 30 நிமிடங்கள் வலிமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை அன்றாட பழக்கம் ஆக்கிக்கொள்ள வேண்டும். நன்கு வியர்வை வரும்வரை கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். எந்தளவிற்கு வியர்வையின் அளவு அதிகரிக்கிறேதோ, அந்த வேகத்திற்கு உங்களது உடல் எடை குறையும் என்பதை எந்த தருணத்திலும் மறக்கக் கூடாது. வெறும் வயிற்றில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டால், உடல் எடை குறைந்து விடும் என்ற தவறான கருத்தை பலர் தங்கள் மனதில் நிலைநிறுத்தி உள்ளனர்.

இது மிகவும் தவறான போக்கு ஆகும். கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு 1 மணிநேரம் முன்பு, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால், நமது பயிற்சிகள் சிறப்பாக அமைவதோடு, நாம் எதிர்பார்த்த பலன்கள் கண்கூடாக கிடைப்பதை காணலாம். இந்த தருணத்தில்,கொழுப்பை குறைக்கும் பயிற்சிகளை நாம் தவறாது மேற்கொள்ள வேண்டும். நானும் ஜிம்முக்கு போறேன் பேர்வழி என்று வலு குறைந்த பயிற்சிகளை மட்டுமே செய்துவந்தால், உடல் எடை மட்டுமல்ல, எந்த நற்பலன்களும் நமக்கு கிடைக்காது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடுமையான உடற்பயிற்சிகள் செய்து நமது உடலை எந்தளவிற்கு வருத்தி செய்கிறோமோ, அந்த அளவிற்கான நற்பலன்களை நாம் நிச்சயம் பெற முடியும். அதிக எடையிலான பளுவை தூக்கி பயிற்சி செய்வதன் மூலம், அது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. தசைப்பிடிப்புகளை உறுதி செய்து, நமது உடல் எடையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது. 150 பவுண்டு எடை கொண்ட ஒருவர், டிரெட்மில்லில் 5 அல்லது 6 மீட்டர் பெர் ஹவரில் பயிற்சி மேற்கொண்டால்ல, அவரது உடலில் உள்ள கலோரியில் 25 சதவீதம் எரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

உங்களது வேகம் அதிகரிக்க அதிகரிக்க உடல் எடையில் அதிக மாற்றத்தை காணலாம். கடினமான பயிற்சிகளுக்கு இடையே யோகா, முதுகுப்பயிற்சி உள்ளிட்ட இலகுவான பயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதய பாதுகாப்பு பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.