தினை தேங்காய்ப் பால் அப்பம்

தேவையான பொருட்கள் :

தேங்காய் – அரை மூடி

நெய் -அப்பம்

பொரிக்க தினை – 200 கிராம்

பொடித்த வெல்லம் – ஒரு கப்

வாழைப்பழம் – 1

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். தினையை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும். குழிப்பணியாரக்கல்லில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும். இப்போது சூப்பரான தினை தேங்காய்ப் பால் அப்பம் ரெடி.