மகனின் காலை அடுப்பில் வைத்த தாய்

கேரளாவில் நான்கு வயது சிறுவனின் காலை அடுப்பில் வைத்து காயப்படுத்திய தாயின் செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது.

காதலனுடன் தங்கிய திருமணமான பெண்
கேரளா அட்டப்பாடி மலை கிராமத்தைச் சார்ந்த சுப்ரமணியன் மற்றும் ரஞ்சிதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்ப தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

மூத்த மகனை சுப்பிரமணியனும், இளைய மகனை ரஞ்சிதாவும் கவனித்து வந்த நிலையில், ரஞ்சிதா தனது இளைய மகனுடன் உண்ணிகிருஷ்ணன் என்ற காதலன் வீட்டில் மூன்று மாதமாக தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் காலில் பலத்த சூடு போட்ட காயங்களுடன் கோட்டத்துறை மலை கிராம மருத்துவமனையில் நான்கு வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பெற்று விருவதாக பாலக்காடு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மகனின் காலை அடுப்பில் வைத்த தாய்
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், ரஞ்சிதாவின் முதல் கணவர் அளித்த புகாரின் பேரில், ரஞ்சிதாவையும், அவரது காதலனையும் கைது செய்துள்ளனர்.

இதில் ரஞ்சிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவன் மிகவும் சொல் பேச்சை கேட்காமல் சுட்டித்தனமாக இருந்ததால், கேஸ் ஸ்டவ்வை சூடாக்கி அதல் சிறுவனின் காலை வைத்து காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்ணிகிருஷ்ணன் தினமும் மது அருந்தி வந்துவிட்டு வயர்களை வைத்து நான்கு வயது சிறுவனையும் தினசரி தாக்கி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த சிறுவனை தந்தை சுப்ரமணியனுடன் பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.