பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள அச்சுறுத்தல்!

பிரித்தானியாவில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரமாக தொற்றும் திறன் வாய்ந்த பறவைக்காய்ச்சல் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெய்டன் என்னும் கிராமத்தில், கோழிகள் விற்கப்படும் இடம் ஒன்றில் எச்5என்1 என்னும் கொடிய பறவைக்காய்ச்சலை உண்டுபண்ணும் வைரஸ் கிருமிகள் இருப்பதை விலங்குகள் மற்றும் பறவைகள் சுகாதார துறை கண்டுபிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பறவைகளும் கருணைக்கொலை செய்யப்பட உள்ளன. அதேவேளை கடந்த டிசம்பரில் இதே இடத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து பறவை பராமரிப்பாளர்களும் விழிப்புடன் இருக்கவும், எதிர்கால பரவுவதை தடுக்க மேம்படுத்தப்பட்ட உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் மிக மோசமான பரவலின் போது இங்கிலாந்தில் 111 அதிக நோய்க்கிருமி பறவை காய்ச்சல் வழக்குகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.