மஞ்சள் பாலை தவிர்த்து கொள்ள வேண்டியவர்கள்

மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மஞ்சள் பால் தவிர்க்க வேண்டியவர்கள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மஞ்சள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளில் ஆக்சலேட் இருப்பதால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீவிரமடைந்து கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.

இரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ள நோயாளிகள் மஞ்சள் பாலை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கும். எனவே, குறைந்த இரத்த சர்க்கரை உள்ள நோயாளிகளின் பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.

வயிற்றில் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், மஞ்சள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சள் கலந்த பாலை குடித்தால் செரிமான பிரச்சனை அதிகரிக்கும்.

இரத்த சோகை உள்ளவர்கள் மஞ்சள் பால் உட்கொள்வது உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்காமல் போகலாம். எனவே, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மஞ்சள் பாலை உட்கொள்வதை தவிர்க்கவும் என்று கூறப்படுகிறது.