ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஷஹீன் அப்ரிடி

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார். ஷஹீன் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.