அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு சிறிய விமானங்கள் நேற்று நடுவானில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் உள்ளூர் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் தரையிறங்க முயன்றதை அடுத்து, வாட்சன்வில்லி நகரில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேருக்கு நேர் மோதிய விமானங்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வாட்சன்வில்லி நகர விமான நிலையத்தில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. செஸ்னா 340 என்னும் இரட்டை என்ஜின் விமானத்தில் இரண்டு விமானிகளும், செஸ்னா 152 என்னும் ஒற்றை என்ஜின் விமானத்தில் ஒருவரும் இருந்துள்ளனர்.

விமானம் மைதானத்தில் தரையிறங்கும் போது யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.