இன்றைய முக்கிய நிகழ்வுகள்

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் சுவாமி புறப்பாடு. இன்று (புதன்கிழமை) ஆவணி மாதம் பிறக்கிறது. மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவில்களில் சுவாமி புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். பெரிய தந்தப் பல்லக்கில் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாந்த ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு,

ஆவணி-1 (புதன்கிழமை) பிறை : தேய்பிறை திதி : சஷ்டி நள்ளிரவு 1.19 மணி வரை பிறகு சப்தமி.

நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.12 மணி வரை பிறகு பரணி. யோகம் : மரண/ சித்தயோகம் ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை சூலம் : வடக்கு நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை இன்றைய ராசிபலன் மேஷம்-நட்பு ரிஷபம்-சிறப்பு மிதுனம்-ஆக்கம்

கடகம்-செலவு சிம்மம்-சுகம் கன்னி-உழைப்பு துலாம்- ஆசை விருச்சிகம்-நிறைவு தனுசு- லாபம் மகரம்-பரிசு கும்பம்-நன்மை மீனம்-நலம்