எளிதில் செய்ய கூடிய தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

நெய் – 2 தேகரண்டி

முந்திரி, திராட்சை – தேவைக்கு

ஏலக்காய் – 3 (பொடித்தது)

செய்முறை –

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும். 7 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும். எளிய முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.