ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்ற விக்கி நயன்

மேலும் படிக்க பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களின் திருமண நிகழ்ச்சி வீடியோவின் புரோமோ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இதனிடையே நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனுடன் அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில், தொடர்ச்சியான பல வேலைகளுக்குப் பிறகு! இங்கே எங்களுக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.