பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு வாழ்த்து கூறிய நாமல்

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதவில் இந்த வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், பெண்களுக்கான மல்யுத்தம் போட்டியில் 57 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று, பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இளையவர் என்ற பெருமையை பெற்ற, குருநாகல் வெல்பல்ல சங்கரதன மகா வித்தியாலயத்தை சேர்ந்த 18 வயதான நெத்மி அஹின்சா பெர்னாண்டோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இலங்கை 1 வெள்ளி 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.