ஈரானில் மகளின் மரணத்திற்கு நீதி கேட்ட தாய்க்கு 100 கசையடிகள்!

ஈரானில் பொஸிலாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரிய தாய்க்கு 100 கசையடிகள் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ஜெருசலேம் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், மெஹபூபா ரம்சானி என்ற அந்த தாய் தனது மகனைக் கொலை செய்த அதிகாரிகளை தண்டிக்க ‘மதர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்’ (‘Mother’s of Justice’) என்ற பிரசாரத்தை நடத்தி வருகிறார், இதனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவர் மீது கோபமாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டில், கொலை செய்யப்பட்ட மகன் பணவீக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்

மெஹபூபா ரம்ஜானி தனது மகன் ஜமான் கோலிபூரின் மரணம், கொலை எனக் கூறி, அதிகாரிகளை தண்டிக்கும் பிரசாரத்தை நடத்தி வருகிறார். ரம்சானியின் மகன் ஜமான் 2019 ஆம் ஆண்டில் மக்கள் இயக்கத்தில் ஈடுபட்டார்.

இதில் ஈரானிய மக்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கியதில், நிர்வாகம் கடும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டது. மக்கள் இயக்கத்தின் போது, ​​போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜமான் உட்பட சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பி நீதிமன்றத்திற்கு சென்று நீதி கேட்கும், ரம்ஜானியின் குரலை ஒடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஹிஜாபை எதிர்த்து குரல் எழுப்பியதற்காக கடந்த வாரம் பல பெண்களுடன் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று தனது மகனுக்கு நியாயம் கேட்ட நிலையில், அவருக்கு இந்த கொடூர தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ம்ஜானி மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று தனது மகனுக்கு நீதி கோரியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களும், இவர்க்கு ஆதரவாக, குரல் எழுப்பியது ஈரானிய ஆட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக ஈரானில் உள்ள ஷரியா நீதிமன்றம் அவருக்கு 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என தண்டனை விதித்துள்ளது.

இந்த தண்டனைக்கு ஈரானியர்கள் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, ரம்ஜானிக்கு சவுக்கடி கொடுப்பதற்கான திகதியை அரசாங்கம் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.