பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயார் கொலை!

பிரான்ஸ் இவெலின் (Yvelines) மாவட்டத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சடலம் தொடர்பில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய பெண் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இவெலின் (Yvelines) மாவட்டத்தில் உள்ள நகரமொன்றி உள்ள அப்பெண்ணின் கணவரது வீட்டின் நில கீழ் அறையில் இருந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த பொலிஸார் அப்பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய அவர் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட அவரது கணவரும் விவாகரத்துக்கான முயற்சிகளின் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. குடும்ப வன்முறை காரணமாக அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் உயிரிழந்த பெண்ணின் கணவர் குடிபோதையில் இருந்தாரா எனவும் ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.