பிரான்ஸ் செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

பிரான்சுக்கு பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும், ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல், கோவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தையோ, அல்லது கோவிட் பரிசோதனை செய்துகொண்டதற்கான ஆதாரத்தையோ பிரான்சுக்குள் நுழையும் முன் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

மேலும், அவர்கள் என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.