ஜேர்மனியில் ஏற்ப்பட இருக்கும் முக்கிய மாற்றங்கள்

ஆகத்து மாதம் ஜேர்மனியில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது. குறிப்பாக, புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கான ஒரு முக்கிய தகவல் செய்தியின் கடைசியில் இடம்பெற்றுள்ளது.

9 யூரோ பயணச்சீட்டு
ஜேர்மனி அறிமுகம் செய்த 9 யூரோ பயணச்சீட்டு திட்டம் ஆகத்து இறுதி வரை தொடரும்.

ஆகத்து உள்ளூர் விடுமுறை
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஆகத்து மாதத்தில் ஒரே ஒரு நாள்தான் உள்ளூர் விடுமுறை, ஆகத்து 15, பவேரியா மற்றும் சார்லேண்டுக்கு Assumption Day விடுமுறை.

வருமான வரி செலுத்தும் நேரம்
வருமான வரி செலுத்த ஆகத்து 31ஆம் திகதி கடைசி நாள் ஆதலால், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

பணி ஒப்பந்தங்களில் அதிக வெளிப்படைத்தன்மை
ஆகத்து 1ஆம் திகதி முதல், பணி ஒப்பந்தங்களில் பணிச்சூழல் முதலான விவரங்களை தெளிவாக குறிப்பிட்டிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு கூடுதல் உதவி
ஆகத்து 1ஆம் திகதி முதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட உள்ளது. மாதம் ஒன்றுக்கு 861 யூரோக்களாக இருந்த அந்தத் தொகை, இனி மாதம் ஒன்றுக்கு 934ஆக உயர்த்தப்பட உள்ளது.

குறைந்தபட்ச ஊதியம் உயர்கிறது
ஆகத்து 1ஆம் திகதி முதல், குறைந்தபட்ச ஊதிய தொகை 50 சென்ட்கள் உயர்ந்து, 12.85 யூரோக்களிலிருந்து 13.35 யூரோக்களாக ஆக உள்ளது.

சில மருந்துகள் விலையில் குறைவு
ஆகத்து 16 முதல், சில வகை மருந்துகளின் விலைகள் குறைய உள்ளன.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல்
மண்ணன், மணல்வாரி அல்லது தட்டம்மை என அழைக்கப்படும் measles நோய்க்கான தடுப்பூசி சில இடங்களில் பணிபுரிவோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச் முதல், மழலையர் பள்ளிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் வாழிடங்கள் மற்றும் இந்த இடங்களில் பணியாற்றுவோருக்கான சிகிச்சை மையங்களில் measles தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பணித்தலங்களில் ஒன்றில் 2020 மார்ச் மாதத்துக்கு முன் ஏற்கனவே பணியாற்றியவர்கள், 2022 ஜூலை 31ஆம் திகதிக்குள், அதாவது நாளைக்குள், தாங்கள் measles தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

இந்த விதியை மீறுவோர் ஆகத்து 1ஆம் திகதி முதல் பணி செய்யவோ, காப்பகங்களில் அனுமதிக்கப்படவோ தடை விதிக்கப்பட உள்ளது. அத்துடன், அவர்களுக்கு 2,500 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.