நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையற்ற நாணய மதிப்பு மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் என்பவற்றை சமாளிக்க வித்தியாசமான முறையை ஸிம்பாப்வே (Zimbabwe) அறிமுகப்படுத்தியுள்ளது .
அதாவது நெருக்கடி நிலையை சமாளிக்க அந்நாட்டு மத்திய வங்கி தங்க நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட 2,000 நாணயங்கள் வர்த்தக வங்கிகளுக்கு விநியோகம்
அதுமட்டுமல்லாமல் தங்க நாணயங்களைக் கடைகளில்கூட பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான பணவீக்கத்திற்குப் பிறகு, உள்ளூர் நாணயத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கணிசமாகக் குறைந்தது.
இதனையடுத்து உள்ளூர் மக்களும் வர்த்தகர்களும் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்த விரும்புகின்றனர். குறிப்பாக அமெரிக்க டாலர் அதிகம் நாடப்படுகிறது.
அதேசமயம் தற்போது அதிகம் நாடப்படும் அமெரிக்க டாலருக்குத் தங்க நாணயங்கள் ஒரு மாற்றாக அமையும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தங்க நாணயங்களை எளிதில் ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவற்றை வங்கிக் கடன்களுக்கு அடைமானமாகவும் பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.