விஜய் டிவியில் மஹா சங்கமமாகும் முக்கிய சீரியல்கள்

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகியவை மஹா சங்கமம் என்கிற பெயரில் தற்போது ஒன்றாக இணைந்து ஒளிபரப்பாக இருக்கின்றன.

தற்போது பாரதி கண்ணம்மா சுத்தமாக பரபரப்பு இல்லாமல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் ரேட்டிங்கும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதனால் தான் இரண்டு சீரியல்களை இணைத்து கதையை நகர்த்த விஜய் டிவி முடிவெடுத்து இருக்கிறது. பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 தொடர்களை இயக்கி வருவதே ஒரே இயக்குனர் என்பது கூடுதல் தகவல்.

அதனால் மூன்றாவது முறையாக தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி ஆகியவை இணைகின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் வைரல் ஆகி வருகின்றன. இதோ..