பல்லி விழுவதால் உண்டாகும் பலன்கள்

எல்லோருடைய வீட்டிலும் இருக்ககூடிய பல்லியில் சில சாஸ்திரங்கள் உள்ளன. பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

பல்லி கத்தினால் என்ன? பல்லி நமது உடலில் விழுந்தால் ஏற்படும் தோஷங்கள் என்ன? என்பன பற்றி பார்க்கலாம் வாங்க தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும். நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமிகரம் உண்டாகும்.

வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும். முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும். கண் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் இன்பம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம் உண்டாகும். பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம் உண்டாகும். கபாலத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் கோபம் உண்டாகும் கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் ஏற்படும். கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் பிரயாணம் செய்ய நேரிடும். மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை உண்டாகும். மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி உண்டாகும்.

மணிக்கட்டு இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும். தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். நகம் வலது பக்கம் பலி விழுந்தால் செலவு உண்டாகும். காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள் கூடும். மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும். மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும்.

கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை உண்டாகும். உதடு மீது இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். உதடு வலது பக்கம் பல்லி விழுந்தால் கஷ்டம் உண்டாகும். முழங்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். முழங்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும். பாத விரல் இடது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும். பாத விரல் வலது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும்.

இடது கை மீது பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். வலது கை மீது பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். இடது கை விரல் மீது பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது கை விரல் மீது பல்லி விழுந்தால் சன்மானம் கிடைக்கும். பாதத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பாதம் வலது பக்கம் பல்லி விழுந்தால் நோய் உண்டாகும்.