மக்களுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கையிருப்பில் இருக்கும் மருந்துகளை வீரயமாக்காது தேவையான அளவுக்கு மாத்திரம் மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்ின் மத்திய செயற்குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொழம்பகே இதனை கூறியுள்ளார்.

மருந்துகளை வீணாக்காது பயன்படுத்துங்கள்

மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. போக்குவரத்து சிரமங்கள் காரணமாக மக்கள் மிகவும் கவனமாக வாழ வேண்டும் என்பது புரிந்துக்கொள்ள வேண்டிய விடயம். மருந்துகளை வீணாக்காது தேவையான அளவை பயன்படுத்துங்கள்.

இருக்கும் மருந்துகளை கவனமாக வைத்திருங்கள். வீணாக்காமல் இருக்கும் மருந்தை பயன்படுத்துங்கள். ஒரு பணியாக இருக்கலாம் அல்லது வீட்டு வேலையாக இருக்கலாம் மிக கவனமாக அவற்றை செய்யுங்கள்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தால், உங்களால் போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது போகும். அதேபோல் மருத்துவர்கள மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க முடியாது போகும்.

குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்

விபத்துக்களுக்கு உள்ளானால், மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். இதனால் இந்த சந்தர்ப்பதில் மிகவும் கவனமாக வாழுங்கள்.

கையிருப்பில் இருக்கும் மருந்துகள் போதுமானதாக இல்லை என்பதால், குழந்தைகளை மிக கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

மொத்தமாக முழு நாட்டையும் எடுத்துக்கொண்டால், குறைந்தளவிலேயே மருந்துகள் கையிருப்பில் உள்ளன. போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் சீர்குலைந்துள்ளதால், எமது உயிர் பாதுகாப்பு ஓரளவுக்கு ஆபத்தாக மாறியுள்ளது எனவும் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.