தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் – விஜய்
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இப்படம் குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பு வரவில்லை என்றாலும், ஏறக்குறைய லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது.
விரைவில் படக்குழுவிடம் இருந்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.
விஜய் – தனுஷ்
இந்நிலையில், இந்த தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து முன்னணி நடிகர் தனுஷ் வில்லனாக நடிக்கப்போவதாக சில தகவல் உலா வருகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு ஒரு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.