இலங்கைக்காக உதவி கோரும் ஐக்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் இலங்கைக்காக உதவியை கோருகிறது

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபையும், அரச சார்பற்ற நிறுவனங்களும் கோரியுள்ளன.

இதற்காக இந்த நிறுவனங்கள் இணைந்து மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளன.

ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்கே இந்த உதவி கோரப்பட்டுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உணவு உட்பட்ட அவசர தேவைகளுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 5.7 மில்லியன் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்த இலங்கை, சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

மே மாதத்தில், உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவானது.

கடந்த அறுவடை பருவத்தில் உணவு உற்பத்தி கடந்த ஆண்டை விட 40 – 50 சதவீதம் குறைந்துள்ளது,

மேலும் நடப்பு விவசாய பருவத்தில் விதைகள், உரங்கள், எரிபொருள் மற்றும் கடன் பற்றாக்குறையால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 மில்லியன் மக்களுக்கு (இலங்கையின் மக்கள் தொகையில் 22 சதவீதம்) தற்போது உணவு உதவி தேவைப்படுகின்றது.

உணவை தவிர்க்கும் மக்கள்

அண்மைய ஆய்வுகள், 86 சதவீத குடும்பங்கள், உணவு உட்கொள்வதைக் குறைப்பது, உணவைத் தவிர்ப்பது உட்பட, குறைந்தபட்சம் ஒரு சமாளிக்கும் பொறிமுறையைப் பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

தற்போது 200 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை,

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இன்னும் 163 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது