முல்லைத்தீவில் மண்ணெண்ணெய் விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதற்கட்டமாக கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை

முல்லைத்தீவு மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் தலையீட்டுடன் ஒரு குடும்ப அட்டைக்கு 200 ரூபாவிற்கும், விவாசாய செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு 500 ரூபாவிற்கும் மண்ணெண்ணைய் வழங்கப்பட்டு வருகின்றது.

மக்கள் காத்திருப்பு
இந்நிலையில் இன்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.