ரஜினியின் பட வசூலை மூன்று நாளில் முறியடித்த கமலின் விக்ரம்

அண்ணாத்த படத்தின் ஒட்டுமொத்த சாதனையும் முறியடிப்பு
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து இருந்தனர்.

அதன்படி அனைவரும் எதிர்பார்த்த வகையில் விக்ரம் திரைப்படம் செம மாஸ்ஸாகவே இருந்தது என்றே கூறலாம், இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தமிழகம் மட்டுமின்றி விக்ரம் திரைப்படம் மற்ற மாநிலங்களிலும் வசூலை குவித்து வருகிறது, அதன்படி இப்போதே இப்படம் ரூ.150 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் ஒட்டுமொத்த வசூலையும் தற்போது விக்ரம் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அண்ணாத்த படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முறியடிக்க விக்ரம் திரைப்படம் வெறும் மூன்றே நாட்கள் தான் எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.