டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி டொலரின் பெறுமதியில் சிறிதளவான மாற்றம் பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி இன்றைய தினம் 365 ரூபா 09 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோவின் பெறுமதி
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 25 சதமாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது.