விரைவில் இந்தியா வரும் போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன்

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது M4 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இதற்கென போக்கோ வெளியிட்டு இருக்கும் டீசரில் புது ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, எல்லோ மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதன் பின்புறம் கேமரா மாட்யூலை சுற்றி பிளாக் நிற பார் இடம்பெற்று இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ரெட்மி 10 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

போக்கோ M4 5ஜி அம்சங்கள்:

– 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
– ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
– மாலி-G57 MC2 GPU
– 4GB / 6GB LPDDR4x ரேம்
– 128GB (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
– 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
– 5MP செல்ஃபி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000mAh பேட்டரி
– 18W ஃபாஸ்ட் சார்ஜிங்