இந்தியாவில் அறிமுகமாகும் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட் போன்

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பரிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய சியோமி 12 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி 12 ப்ரோ மாடலில் 6.73 இன்ச் 2K+ சாம்சங் E5 OLED ஸ்கிரீன் கொண்ட 120Hz LTPO டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

இத்துடன் அதிகபட்சம் 12GB ரேம், MIUI 13, நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படும் என சியோமி உறுதி அளித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி 12 ப்ரோ அம்சங்கள்:

– 6.73 3200×1440 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, 120Hz ரிபெஷ் ரேட்re
– கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
– 8GB / 12GB LPPDDR5 6400Mbps ரேம்
– 256GB UFS 3.1 1450MBps மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
– 50MP பிரைமரி கேமரா, f/1.9
– 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 50MP ப்ரோடிரெயிட் கேமரா
– 32MP செல்ஃபி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ. வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்.பி. டைப் சி
– 4600mAh பேட்டரி
– 120 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

புதிய சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நாய்ர் பிளாக் மற்றம் ஒபேரா மாவ் மற்றும் காண்டுர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB + 256GB மாடல் விலை ரூ. 62 ஆயிரத்து 999 என்றும் 12GB + 256GB மாடல் விலை ரூ. 66 ஆயிபத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.